தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
admin - 0
தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்தினம் நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கக் கூடாது. ஏனென்றால் அங்கு நடைபெறும் விஷயங்கள் மிக மோசமானதாக...
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் அரசு பயண ஆவணங்களை வழங்கியது. இவர்களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர்.
கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர், ராணுவ மோதலுக்கு பிறகு இரு...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கப்பட உள்ளது.
கலை மற்றும் கலாச்சாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான...
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி
admin - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று. இங்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி போட்டியிட்டார்.
இவரது தாய் மீரா நாயர் இந்தியாவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர். தந்தை மகமூத் மம்தானி உகாண்டாவைச் சேர்ந்தவர். ஜோரான் மம்தானிக்கு 7 வயது இருக்கும்போதே...
விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.
‘ரத்தம் குடிக்கும் அதிகாரப் பசி’ - சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடான் தேசிய ராணுவத்துக்கும்,...
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், "ஆப்கனிஸ்தானை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பொம்மலாட்டத்தில் பொம்மைகளை பின்னால் இருப்பவர்கள் இயக்குவதுபோல, ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது. இந்தியா சொல்படி பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனிஸ்தான்...
நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே...
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணம் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி ஹாட்பாட் குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 மீட்டர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களைக் கவர்கிறது. ஒரு பிரிவு சிவப்பாகவும், மற்றொரு பிரிவு வெள்ளை நிறத்திலும் உள்ளது அந்த தொட்டியில் சிவப்புப் பக்கம் உள்ள தண்ணீரில் மிளகாய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவை நிரப்பப்பட்டுள்ளன. வெள்ளை பக்கம்...
சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு
admin - 0
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.
ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி...
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது....









