பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில்...
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு
admin - 0
அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து டிவிடெண்டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதை உற்பத்தி செய்யும் நாட்டைப் பொறுத்து 10 முதல் 50% வரை வரி விதித்தார். நீண்டகாலமாக நிலவும் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவே இந்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை...
நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். காமன்வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடுகளின் பயணிகள் மாஸ்கோவுக்கு சுற்றுலா செல்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சிஐஎஸ் நாடுகளுக்கு வெளியில்...
உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: உலகம் முழுவதும் உடனடி அமல்
admin - 0
இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த...
பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்
admin - 0
‘‘இஸ்ரேலும் இந்தியாவும் சேர்ந்து பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்குவதற்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அனுமதிக்கவில்லை. இது மிகவும் அவமானகரமானது’’ என்று அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிஐஏ அதிகாரியாக பணியாற்றியவர் ரிச்சர்ட் பார்லோ. இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை கஹுவா...
டென்மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்சன். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற போலி வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்கினார்.
ஓபன் ஏஐ மற்றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி...
இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த உடல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அக்டோபர் 10-ம் தேதி அமெரிக்க மத்தியஸ்தத்தின் முயற்சியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் சமீபத்திய முன்னேற்றமாக இது...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி. 22 வயதான இவர் ரஷ்யாவின் உபா நகரத்தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இவர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். அதன் பின் விடுதிக்கு திரும்பவில்லை...
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி
admin - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று. இங்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி போட்டியிட்டார்.
இவரது தாய் மீரா நாயர் இந்தியாவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர். தந்தை மகமூத் மம்தானி உகாண்டாவைச் சேர்ந்தவர். ஜோரான் மம்தானிக்கு 7 வயது இருக்கும்போதே...
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலுக்கு 114 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பசிபிக் கடலில் உருவான கல்மேகி புயல் நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பிராந்தியத்தை கடந்து தென் சீனக் கடல் நோக்கி நகர்ந்தது. இதில் பிலிப்பைன்ஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள தீவுகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளக் காடாக...










