Google search engine
ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன. அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்​லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடு​களுக்​கான 85 சதவீத கச்சா எண்​ணெய், சமையல் காஸ் ஏற்​றுமதி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே நடை​பெறுகிறது. அமெரிக்கா உடனான போர் காரண​மாக இந்த ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான்...
ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்​தாரை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்​தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசு​வில் அந்த நாட்​டின் ராணுவ தளம் உள்​ளது. அங்கு ஏவு​கணை​கள் சேமித்து வைக்கப்பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதைத் தொடர்ந்து சிராசு​வில் உள்ள...
மத்​திய கிழக்கு நாடு​களில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு கடந்த சில நாட்​களாக பொது​வெளி​யில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வரு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், ஈரானின் புரட்​சிகர பாது​காப்​புப் படை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், ”குழந்​தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என கூறப்​பட்​டுள்​ளது. மார்ச் 12ம்...
பாகிஸ்​தானில் நடை​பெறும் தீவிர​வாத சம்​பவங்​களுக்கு தெஹ்ரிக்​-இ-தலி​பான்​கள் தான் காரணம் என்​றும் இவர்களுக்கு ஆப்​கானிஸ்​தான் அடைக்​கலம் கொடுப்​ப​தாகவும் பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டு​கிறது. ஆனால் இதை ஆப்கானிஸ்தான் மறுக்​கிறது. இந்த விவ​காரம் காரண​மாக பாகிஸ்​தான் - ஆப்கானிஸ்​தான் எல்​லை​யில் கடந்த சில வாரங்களாக மோதல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் கடந்த வெள்​ளிக்கிழமை இரவு பாகிஸ்​தானின் ராவல்​பிண்​டி​யில் உள்ள ராணுவ தலை​மையகம் உட்பட 3 இடங்கள் மீது ஆப்​கானிஸ்​தான் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. அவற்றை பாகிஸ்​தான்...
கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாட்களாக இரு தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட தகவல்: கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின்...
“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல் 13-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கோ குறிவைப்பதற்கோ எதுவும் இல்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் போரை தான் முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை...
அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. இதற்காக அமெரிக்க விமானப் படையின் யு.எஸ்.கே.சி -135 ரக...
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத்...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!” - இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து... “பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.”...