அமெரிக்​கப் போர்க்​கப்​பல் மீது தாக்​குதல் முயற்​சிக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தியுள்​ளது. அமெரிக்க போர்க்​கப்​பல் மீது ஈரான் நாட்​டின் இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) அடுத்​தடுத்து இரண்டு முறை பாலிஸ்​டிக் ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இந்த தாக்​குதல் முயற்​சிக்கு சரி​யான பதிலடி கொடுக்​கும்​படி அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் உத்​தர​விட்​டார். அதன்​பேரில், ஓமன்...
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். கொழும்பு புறப்படுவதற்கு முன்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மூன்றுநாள் அரசு...
ஏமன் தலைநகர் சனா உட்பட பல்​வேறு பகு​தி​களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்​களது கட்​டுப்​பாட்​டில் வைத்துள்ளனர். இந்​நிலை​யில் ஏமனின் ஜவுஃப் மாகாணத்​தில் உள்ள அல் ஹசாம் நகர மத்​திய சிறைச்​சாலை​யின் மீது சவுதி அரேபியா நடத்​திய விமான தாக்​குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்​லப்​பட்​ட​தா​வும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்த​தாக​வும் ஹவுதி சுகா​தார அமைச்சக செய்​தித் தொடர்​பாளர் அனீஸ் அல் அஸ்​பஹி தெரி​வித்​திருந்​தார். இதனிடையே ஏமனில்...
ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை சில நாட்​களுக்கு முன்பு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். அதில் ஈரானின் கார்க் தீவு அழிக்​கப்​படு​வது போன்ற காட்​சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6-ம் தேதி ஏவு​கணை​களை...
நில​வில் புதிய தளம் அமைக்​கும் திட்​டத்​தில் அமெரிக்​காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்​டும் என்று அந்த நாட்டு தூதர் செர்ஜியோ கோர் அழைப்பு விடுத்துள்ளார். கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் 3 நாள் விண்​வெளி கண்காட்சி நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழா​வில் இந்தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் பங்கேற்றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாங்​கள் மீண்​டும் நில​வுக்கு பயணம் மேற்​கொள்ள உள்​ளோம். நில​வில் புதி​தாக ஓர் தளத்தை அமைக்க...
இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்​தா​வின் சுகர்​னோ-ஹட்டா மற்​றும் ஹலீம் பெர்தா​னாக்​குசுமா உள்​ளிட்ட 8 முக்​கிய விமான நிலை​யங்​களில் சேவை​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதனால் சுமார் 1,70,000 பயணி​கள் விமான நிலை​யங்​களில் தவித்து வரு​கின்​றனர். ஜூலை மாதத்​துக்​குப் பிறகு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஏற்​பட்ட வெடிப்பே மிக​வும் சக்​தி​வாய்ந்​த​தாக இருந்​த​தாக​வும், பூமிக்கடியில் லாவா குழம்பு மற்​றும் வாயுக்​களின் அழுத்​தம்...
அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்​.11-ம் தேதி, அல்​காய்தா தீவிர​வா​தி​கள் 2 பயணி​கள் விமானத்தை கடத்​திச் சென்று அங்​கிருந்த இரட்டை கோபுர கட்​டிடங்​கள் மீது மோதினர். இதில் அந்​தக் கட்​டிடங்​கள் தீப்​பிடித்து எரிந்து இடிந்து தரைமட்​ட​மானது. இந்த சம்​பவத்​தில், அந்​தக் கட்​டிடத்​தில் இருந்​தவர்​கள் மட்​டுமல்​லாது, 19 தீவிர​வா​தி​கள், 300 தீயணைப்பு வீரர்​கள் உட்பட மொத்​தம் 2,996 பேர் உயி​ரிழந்​தனர். இச்​சம்​பவத்​துக்​கு, ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிர​வாத...
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்​துச் சிதறியதையடுத்து 6 விமான நிலை​யங்​கள் மூடப்பட்டுள்​ளதுடன் 300-க்​கும் மேற்​பட்ட விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அந்​நாட்​டின் தலைநகர் ஜகார்த்தா உள்​ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்​பாடு​கள் நேற்று தற்​காலிக​மாக நிறுத்தப்பட்​டன. எரிமலை​யி​லிருந்து வெளி​யேறிய சாம்​பல் வான் பரப்​பில் பரவியதை அடுத்​து, ஜகார்த்​தா​வின் சுகர்​னோ-ஹட்டா சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளூர் நேரப்​படி காலை 5:30 மணி முதல் தனது சேவை​களைத் தற்​காலிக​மாக நிறுத்​தி​யது. இதனால் ஒரே...
டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்​டத்தை வென்​றார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்​தை​யும் பிடித்​தனர். வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த...
ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்​குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளி​யிட்​டது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்​டும் போர் தீவிரமடைந்து உள்​ளது. இந்த சூழலில் ஈரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி தளமான கார்க் தீவின் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்​தினம் ஏவுகணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக அமெரிக்க போர்க்​கப்​பல்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை​களை வீசி​யது. இந்த ஏவு​கணை​கள்...