தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி...
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின்போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்” வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் வெனிசுலாவை சுற்றிவளைத்து அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன்...
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் அண்மைக்காலமாக இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிச.18-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த தீபு சந்திரா அடித்துக் கொல்லப்பட்டார். டிச. 24-ல் ராஜ்பாரி பகுதியை சேர்ந்த அம்ரித் மண்டல் கொலை செய்யப்பட்டார். கடந்த 29-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில் வங்கதேசத்தின் ஜெஸ்ஸோர் மாவட்டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் செல்லும்போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நிருபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வருமாறு:...
வெனிசுலாவின் புதிய அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் அமெரிக்காவின் அறிவுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்தது.
இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து வெனிசுலா துணை...
வங்கதேசத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றது. அதன்பிறகு கடந்த மாதம் மாணவர்கள் மீண்டும் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து இந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. கடந்த மாதம் மட்டும் 2 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் 18-ம்...
மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையை சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும்....
சீனாவின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒருவனாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கடந்த 1989-ம் ஆண்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் குவிந்த மாணவர்களை சீன ராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது. இதில்...
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.
மேலும், போதைப் பொருள்...
நியூயார்க் சிறையில் வெனிசுலா அதிபர்: போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு
admin - 0
வெனிசுலாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படையினர் சிறைபிடித்தனர். பின்னர்,...
