பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்
admin - 0
இந்தியாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கிரிமினல் அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட வலைகளங்களை அமெரிக்கா முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் மருந்து மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்வாளர்கள்,...
டெல்லியில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்டுக்கு வருவதை ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டேரஸும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: செயற்கை நுண்ணறிவுத்துறை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல நன்மைகளும்,...
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்...
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....
பலுசிஸ்தான் பெண் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பாக். வீரர்கள் 200 பேர் பலி – நடந்தது என்ன?
admin - 0
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிரவாதிகள் இருவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 200 பேர் உயிரிழந்ததாக பிஎல்ஏ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தன்னாட்சி கோரி பிரிவினை வாதிகள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பலுசிஸ்தான் விடுதலைப் படையினருக்கும், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலுசிஸ்தானில்...
இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ புத்தகமாக வெளியாகியுள்ளது. சிறந்த ஆடியோ புத்தகம் பிரிவில், தலாய் லாமாவின் உரைகள் அடங்கிய ஆடியோ தேர்வு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 68-ம் ஆண்டு கிராமி விருது விழாவில் தலாய்லாமாவுக்கு கிராமி விருது...
‘விக்கி லீக்ஸ்’, ‘பனாமா லீக்ஸ்’ என்று இந்த உலகம் பல்வேறு ஆவணக் கசிவுகளைக் கண்டுள்ளது. அவையெல்லாம் அரசியல், சொத்து விவரங்கள் தொடர்பானதாகவே இருந்துள்ளன. ஆனால், ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ அல்லது ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்ற ஆவணம் அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிபர்கள், அரசியல் புள்ளிகள், பிரிட்டன் இளவரசர், டெக் ஜாம்பவான்கள் எனப் பலரின் பெயரையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
தங்களின் சமூக அந்தஸ்தையும், அதற்குத் தேவையான தார்மிக ஒழுக்கத்தையும் தாண்டி, கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட...
ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்தியாவுடனான உறவை அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து மேம்படுத்தவே ரஷ்யா விரும்புகிறது" என்றார்.
ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், "இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை" என்று தெரிவித்தன.
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
காங்கோவின் வடக்குப் பகுதியில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழு செயல்படுகிறது. இந்த குழு கோமா,...
