Google search engine
வங்​கதேசத் தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி(பிஎன்​பி) கூட்​டணி வெற்றி பெற்றுள்ளது. வங்​கதேசத்​தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் பொதுத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான பிஎன்பி...
வங்​கதேசத் தேர்​தலில் பிஎன்பி கட்​சி மூத்த தலை​வரும், இந்து மதத்​தைச் சேர்ந்​தவரு​மான காயேஷ்வர் சந்​திர ராய் போட்​டி​யிட்​டார். டாக்​கா-3 தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அவர் மொத்​தம் 99,163 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். இவர் வங்​கதேச முன்​னாள் அமைச்​சர் ஆவார். வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடை​பெற்று வரும் வேளை​யில், சிறு​பான்​மை​யின​ராக இருக்​கும் இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர் தலைநகர் டாக்​கா​வில் உள்ள தொகு​தி​யில் வெற்றி...
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூ​யின்' மற்​றும் இன்​ஸ்​டா கிராம் பக்​கங்​களில் வீடியோ ஒன்றை அவர் வெளி​யிட்​டார். அதில், மூன்று சிறு​வர்​கள் கே.எஃப்​.சி உணவகத்​தில் கோழி இறைச்​சியை உண்​டு​விட்​டு, மீதமிருந்த எலும்​பு​களை வீணாக்க விரும்​பாமல் அதனைச் சாதத்​துடன் கலந்து ஒரு ஆதர​வற்ற முதி​ய​வருக்கு வழங்​கு​கின்​றனர். ”இன்று நாம் ஒரு நற்​செயல் செய்​யப் போகிறோம்” என்ற பின்​னணி குரலுடன் அந்த...
வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் இந்து வர்த்​தகர் கொடூர​மாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்​கதேசத்​தில் நாளை பொதுத் தேர்​தல் நடை​பெறுகிறது. பிரதமர் பதவி​யில் இருந்து ஷேக் ஹசீனா வில​கிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்​துக்​கள் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், மைமென்​சிங் மாவட்டத்தில் நேற்று முன்​தினம் இந்து அரிசி வர்த்​தகர் சுஷேன் சந்​திர சர்க்​கார் (62) கொடூர​மான முறை​யில் மர்ம நபர்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து காவல் துறை​யினர்...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகை முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப்...
கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய அவையில் உரையாற்றிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘கடந்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால், தனது மூலோபாய நலன்களுக்காக அமெரிக்கா, பாகிஸ்தானை சுரண்டியது. அதன் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, கழிப்பறை காகிதத்தைப் போல கருதியது. 1999க்குப் பிறகு...
கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தம்ப்ளர் ரிட்ஜ் என்ற நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு வீட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர்...
காஷ்மீரின் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக, பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள், ராணுவ மற்​றும் விமானப்​படை தளங்​கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தானில் உள்ள போஹ்லாரி விமானப்​படை தளத்தின் விமான நிறுத்​தும் இடம் பலத்த சேதமடைந்​தது. இந்நிலையில், அப்​பகு​தியை சீரமைக்​கும் பணி​களில் பாகிஸ்தான் விமானப்​ படை ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. குறிப்​பாக, ஜனவரி 28 அன்று எடுக்​கப்​பட்ட செயற்​கைக்​கோள் புகைப்​படங்​களின் ​படி, சேதமடைந்த ஹேங்​கரின்...
இந்​தி​யா​வைச் சேர்ந்த காமினி கண்​ணன் 23 ஆண்​டு​கள் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​னார். ஒரு திரு​மணத்​தில் கலந்துகொள்​வதற்​காக மீண்​டும் துபாய் சென்​றிருந்​தார். தனது மகன் அபிமன்யு வீட்​டில் தங்​கி​யிருந்தார். அப்போது தங்க நாணயங்கள் கொண்ட பை பழையதாகிவிட்டதால், அதை வேறு ஒரு பையில் மாற்றி டைனிங் டேபிளில் வைத்தார். அந்​தப் பையில் தலா 8 கிராம் எடை​யுள்ள நான்கு 22 காரட்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஆண்டுதோறும் பிப்ரவரி 8 அன்று விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் மரபை கைவிட்டுள்ளார். ஈரானில் முன்பு இருந்த மன்னராட்சியை வீழ்த்துவதற்காக 1979, பிப்ரவரி 8-ம் தேதி விமானப்படை அதிகாரிகள் குழு, ரூஹோல்லோ கோமேனிக்கு விசுவாசமாக இருப்பது என சத்தியப் பிரமாணம் எடுத்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி,...