பாலியல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் பாதிரியார் கைது: 74 ஏக்கரை 2 ஆயிரம் போலீஸார் சுற்றிவளைத்து நடவடிக்கை
admin - 0
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டின்பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலாயை, ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரில் உள்ளது ‘தி கிங்டம் ஆப் ஜீசஸ் கிரைஸ்ட்’ தேவாலயம். 74 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி மற்றும் ஆடிட்டோரியத்துடன் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாதிரியாராக இருப்பவர் அப்போலோ குயிபோலாய். இந்ததேவாலயத்துக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், இவரின்தீவிர ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். இவர்...
டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். தான் ஆட்சி அமைத்தால், தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவேன் என்று ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். சேவை...
எண்ணெய் சுத்திகரிப்பு, மின் உற்பத்தி நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
admin - 0
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் படை ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் தரப்பு தகுந்த எதிர்வினையாற்றி வருகிறது.இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டு ட்ரோன்கள் உட்பட 15 பிராந்தியங்களில் உக்ரைன்...
இஸ்ரேல் காசா போருக்கு காரணமான அக்டோர் 7 தாக்குதலின்போது கடத்தப்பட்ட பிணைக்கைதி ஒருவரை காசாவின் நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
போர் தொடங்கி 10 மாதங்களுக்கு பின்பு ஒருவர் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், போர் நிறுத்தத்துக்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், இன்னும் 12-க்கும் மேற்பட்டோர் காசாவில் பிணைக் கைதியாக இருப்பது வலி மிகுந்த நினைவூட்டலாகவே இருக்கிறது.பிணைக் கைதியின் விடுவிப்புக் குறித்து இஸ்ரேல்...
டெலிகிராம் மெசஞ்சரின் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. டெக் துறை சார்ந்து இயங்கி வருபவர்கள் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதே நேரத்தில் அடிப்படையில் டெலிகிராம் மெசஞ்சர் குறித்து கொஞ்சம் அறிவோம்.
மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக இயக்குனர் பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உலக அளவில் டெலிகிராம் பயன்பாடு எப்படி...
கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி
admin - 0
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன ராணுவம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன போர்க் கப்பல்கள், உளவு கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன....
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.
லெபனான் நாட்டின் பிரதான அரசியல்கட்சியாகவும், துணை ராணுவ படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே...
போலந்து நாட்டில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு பிரதமர் மோடி சிறப்பு ரயிலில் பயணம் செய்தார். உக்ரைன் நாட்டின் ரயில் வழித்தடம் 24,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். உலகில் மிக நீளமான ரயில் வழித்தடங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு12-வது இடத்தில் உள்ளது. உக்ரைனின் ரயில் வழித்தடங்கள் மீதுரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையே...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரைநிறுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போரில் உக்ரைனின் 25 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், நார்வே உள்ளிட்ட பல்வேறு...
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது.
இந்நிலையில் இங்கு கனடாவின் லூகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுரங்கத்தில்இருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமாக கருதப்படுகிறது.1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட்கல்லினன்...










