அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம் வந்து கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடத்தினர். பட்டாசு வெடித்து வாண வேடிக்கையோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கும்பாபிஷேக வாழ்தரங்கம் நடைபெற்றது.















