இரணியல் அருகே வெட்டுகாட்டு விளை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (17) கல்லூரி படிப்பிற்கு தயாராகி வந்தார். சம்பவத்தன்று அருகே உள்ள தபால் அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோரின் புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவி எங்கு சென்றார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.















