Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பெண் கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: கட்சித் தலைவர்கள் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த பெண் கோட்டாட்சியரை, லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: பழனிசாமி: கடந்த ஆண்டு ஏப்ரலில் தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டார். தூத்துக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலரை ஆளுங்கட்சி நிர்வாகி ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதன் உச்சமாக, 2 நாட்களுக்கு...

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட விவகாரம்: அரவிந்த்சாமிக்கு ரூ.65 லட்சம் வழங்காத பட தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் வாரண்ட்

பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.65 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்காத படத்தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. இப்படத்துக்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூ.30 லட்சத்தை வழங்கவில்லை என்றும், டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட ரூ.27 லட்சத்தை முறையாக செலுத்தவில்லை என்றும், பட வெளியீட்டுக்காக பெற்ற ரூ.35 லட்சம் கடனை...

தேசிய பெண் காவலர் துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கினார் டிஜிபி சங்கர் ஜிவால்

மிழக காவல் துறை சார்பில் தேசியஅளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டிகள் நேற்று வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் தொடங்கியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். தமிழக காவல் துறை சார்பில்தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற போட்டியில் கைத்துப்பாக்கி சுடும் ஸ்குவாட்டிங் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப்...

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் ஜூலை 31 வரை 10% கட்டண சலுகை ரத்து

அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக துணை மேலாளர், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களாக இருந்ததால், இந்த கோடைகால விடுமுறை நாட்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், நடைமுறையில் உள்ள முழு கட்டணமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜூன் 16 முதல் ஜூலை 31...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஐஜேகே ஆதரவு

இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணிக்கு முழு ஆதரவு அளிப்போம். விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவர் எம்.செந்தில்குமார் தலைமையில் ஐஜேகே நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களப்பணி ஆற்றுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தில் உதவி இயக்குநராக அசோக் செல்வன்

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், மதுமிளா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குநர் திருமலை தயாரித்துள்ளார். படம்பற்றி இயக்குநர் பாலாஜி கேசவன் கூறும்போது, "நான் எழில், லிங்குசாமி ஆகியோரிடம் பணியாற்றினேன். இது எனக்கு முதல் படம். சென்னையில் நடக்கும் ரொமான்டிக் காமெடி கதை. பொழுதுபோக்கை மட்டுமே மையமாக...

கனடாவுடன் இந்திய அணி இன்று மோதல்: பார்முக்கு திரும்புவாரா விராட் கோலி?

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - கனடா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுகடைசி லீக் ஆட்டம். இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதேவேளையில் கனடா 3...

போர்க் கப்பல்களுக்காக 26 ரஃபேல் விமானம் வாங்க இந்தியா – பிரான்ஸ் பேச்சு

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக, 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா - பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மக்களவை...

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்துகொண்டார். ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப்...

எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் ச‌தாசிவ நகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புகார்தாரர் கடந்த மே 25-ம் தேதி உயிரிழந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம் தேதி எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக ச‌ம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. எடியூரப்பா கர்நாடக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...

தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...

மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்

நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...