31 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்தி இரு கோல்கள் அடித்தார் (16 மற்றும் 57-வது நிமிடம்). செல்வராஜ் கனகராஜ் (21-வது நிமிடம்), திலீபன் (38-வது நிமிடம்), ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி (40-வது நிமிடம்), மனோஜ் குமார் (41-வது நிமிடம்), மாரீஸ்வரன் சக்திவேல் (49-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்ற ஆட்டங்களில் உத்தபிரதேசம் 6-0 என்ற கோல் கணக்கில் கேரளாவையும், கர்நாடகா10-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியையும், மணிப்பூர் 19-1 என்ற கோல் கணக்கில் பிஹாரையும், மத்திய பிரதேசம் 29-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் அணியையும் வீழ்த்தின.