தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் மாணவர்களுக்கு சப்ளை செய்வதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (20-ம் தேதி) போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அங்கு நின்ற 4 பேரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் திருவிதாங்கோட்டை சேர்ந்த சல்லாஹூதின், முகமது அசாத், கோட்டாரை சேர்ந்த நபி அகமது, மற்றும் நடுக்கடையை சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரியவந்தது.
இதை அடுத்து தப்பி ஓடிய வாலிபர் உட்பட ஐந்து பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய பைக், 250 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.