குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கீழ்குளம் முதல் நிலை பேரூராட்சி, பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மாபெரும் கண் சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவர் சரளா கோபால் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன், லாசர், அல்போன்சள், ஷோபா, கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பெஜான்சிங் கண் மருத்துவர் செவிலியர்கள் கலந்து கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்து சென்றனர்.