மார்த்தாண்டத்திலிருந்து பத்துகாணி மலை கிராம பகுதிக்கு நேற்று (20-ம் தேதி) இரவு 8: 30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. ஆலஞ்சோலை அருகாமையில் ரப்பர் எஸ்டேட் பகுதியில் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் கை குழந்தைகளுடன் இருந்த பெண்கள் உட்பட பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
மாற்று பேருந்து ஏற்பாடு செய்யாததால் பயணிகள் இருளில் பல மணி நேரம் தவித்தனர். அவர்களுக்கு அடுத்த பேருந்து இரவு 10: 30 மணிக்கு தான் வரும் என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். சிலர் ஊரில் இருந்து இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களை வரவழைத்து வீடுகளுக்கு சென்றனர். மற்றவர்கள் இரவு 10: 30 மணி வரை அப்படியே காத்திருந்தனர். இதை அடுத்து இயக்கப்பட்ட வேறு பஸ்ஸில் அவர்கள் பயணம் செய்து தங்கள் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலை மிகவும் மன வருத்தம் அளிப்பதாக பத்தகாணி பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.