குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயசேகர் மகள் ஜோஷிகா. இவர் பூட்டான் நாட்டில் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மகளீர் அட்யா – பாட்யா சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கலந்து கொண்டார். இதில் இவர் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.
இவர் நாகர்கோவில் இந்து கல்லூரியில் சோசியாலஜி துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அதே பகுதி காட்டுவினை ஊர் சாஸ்தா கோவிலில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சார்பாக சமய வகுப்பிலும் உள்ளார். வெளிநாட்டில் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜோஷிகாவை பாராட்டி சொந்த ஊரான காட்டு விளையில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஊர் சார்பில் கவுரவிக்கப்பட்டார்.