புதுக்கடை:   2 குழந்தைகளுடன் பெண் மாயம்

0
113

துக்கடை அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் பென் சாம் ( 40).   இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும்  உள்ளனர். ஜெயா கண் கண்ணாடி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவ தினம் கருங்கல் பகுதிக்கு  செல்வதாக கூறிவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ஜெயா பின்னர் திரும்பி வரவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து பென்சாம்  புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here