களியக்காவிளை அருகே களியிக்கல் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. கோயில் இவ்வருட திருவிழா கடந்த வாரம் நடந்து முடிந்தது. கோயிலில் தினமும் பூஜைகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று மாலை பூஜை செய்ய வந்து பார்த்த போது. கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து சுமார் 4 ஆயிரம் ரூபாய் திருடியுள்ளனர். மேலும் கோயில் மடப்பள்ளி பூட்டை உடைத்து அதிலுருந்து தங்க சுட்டி, தங்க பொட்டுகள் உட்பட சுமார் ஒன்றரை சரவன் தங்க நகைகளை மர்ம திருடர்கள் திமுடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து கோயில் செயலாளர் ராஜன் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.