விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி ஸ்ரீஜா (37). வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடிவேல் 4 நாட்கள் முன்பு ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 30) தனக்குச் சொந்தமான 4 பவுன் செயினை கேட்டுள்ளார். அப்போது நகைகளை தனது தம்பிக்குக் கொடுத்ததாக ஸ்ரீஜா கூறியுள்ளார். அப்போது என்னைக் கேட்காமல் யாருக்கும் நகைகள் கொடுக்கக் கூடாது என கூறியுள்ளார். நேற்று (ஜூலை 1) காலை வீட்டினுள்ளே கழிவறையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து ஸ்ரீஜா கருகி கிடந்துள்ளார். நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.