மிடாலம்: நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடைதிறப்பு

0
44

மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பக கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அமைத்துத் தர அப்பகுதியினர் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றன. நேற்று படிப்பகம் மற்றும் பயணிகள் நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ராஜகிளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here