குமரி: காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

0
77

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள வரகுணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட்ராஜா (வயது53), காண்டிராக்டர். மேலும், இவர் கிரசர் தொழில்சாலை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் களியங்காடு பகுதியை சேர்ந்த சர்ஜன் சாமுவேல் (52) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து எட்வர்ட் ராஜாவின் தொழிற்சாலைக்கு சென்று அவரிடம் இந்த தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு எங்களுக்கு ரூ. 20 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ” அதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எட்வர்ட்ராஜா பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்ஜன் சாமுவேலை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள். சர்ஜன் சாமுவேல் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் பலவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here