மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் அனீஸ் (23). இவர் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அனீஸ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் காம்பவுண்ட் உள்ளே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அனீஸ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்தி விசாரணையில் பரப்பற்று பகுதியை சேர்ந்த ஆனந்த் (24), அவரது நண்பர் தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த வினோத் ராஜ் (20 ) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.