கிள்ளியூர்: ராஜேஷ் குமார் எம்எல்ஏ  கிறிஸ்துமஸ் வாழ்த்து

0
38

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: – இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற பல கோடி கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற பண்டிகையாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது. ஏழை எளியவர்கள் மீது அன்பு காட்டுகின்ற மதமாக கிறிஸ்துவ மதம் இருந்து வருகிறது. இயேசு கிறிஸ்து உலகமக்கள் அனைவருக்கும் அன்பையும், உண்மையையும், சமாதானத்தையும் போதித்தார். நாமும் நமது சுற்றத்தாரிடம் அன்பு செலுத்துவோம். 

உலக மக்கள் அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும் போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உள்மனார வாழ்த்துகிறேன். கிறிஸ்துமஸ் நல்நாளில் அனைவர் குடும்பங்களிலும் அமைதியும், ஒற்றுமையும் உயர்வும் ஏற்படவும், மன நிம்மதியோடும், மகிழ்ச்சியுடனும், இருள் நீங்கி ஒளிமயமான வாழ்வு அமைந்திடவும், மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here