நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் மனைவி சுஜி (38). இவர் பியூட்டிசியனாக வேலை பார்க்கிறார். சம்பவ தினம் இவர் மார்த்தாண்டம் – புதுக்கடை சாலையில் காப்புக்காடு பகுதியில் தனது பைக்கில் வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ ஒன்று மோதி தள்ளி விட்டு சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த சுஜியை மீட்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று (24-ம் தேதி) வழக்கு பதிவு செய்து, அடையாளம் தெரியாத ஆட்டோ குறித்து விசாரித்து வருகின்றனர்.