கொற்றிக்கோடு: பெண்ணின் தங்ககொலுசு திருட்டு ; வழக்கு பதிவு

0
43

தக்கலை அருகே குமாரபுரம், முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (33). திருவனந்தபுரத்தில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்த மர்மம் நபர் பிரணவ் மனைவியின் காலில் கடந்த சுமார் 12 கிராம் தங்க கொலுசை திருடி சென்றார்.

சத்தம் கேட்டு விழிப்பதற்குள்  நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் நான்கு இடங்களில் கைரேகைகள் சிக்கினர்  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here