ருங்கல் பேரூராட்சியின் 13வது வார்டு பகுதியான பாலவிளையில் ஆலக்குளம் என்ற குளம் உள்ளது. இது 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய குளமாகும். இந்த குளம் தற்போது கோடைகாலம் காரணமாக வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் சற்று குறைவாக காணப்படுகிறது. இந்த குளத்தின் கரைபகுதிகளில் பேரூராட்சி சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் உள்ளன. இங்குள்ள இரண்டு கிணறுகளிலிருந்து கருங்கல் பகுதி மக்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலக்குளத்தில் உள்ள மீன்கள் நூற்றுக்கணக்கில் திடீரென செத்து மிதக்கின்றன. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த குளத்தில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 13வது வார்டு கவுன்சிலர் பிரேம் சிங் என்பவர் கருங்கல் பேரூராட்சி செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்.