நித்திரவிளை அருகே உள்ள கூனம்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (48) வேன் ஓட்டுனர். இவர் திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ரிஜோ (35) என்பவரிடம் தனது வீட்டுத் தேவைக்கு எம்சாண்ட் வேண்டுமென கேட்டு பத்து நாட்களுக்கு முன்பு ரிஜோவிடம் எம்சாண்ட்டுக்காக ரூ.18 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் ரிஜோ எம்சாண்ட் இறக்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் நடைக்காவு பகுதியில் வைத்து ரிஜோவைக் கண்ட ராஜேஷ்குமார் எம்சாண்ட் இறக்கித் தருமாறும், முடியவில்லை என்றால் பணத்தைத் திருப்பித் தருமாறும் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்திருந்த ரிஜோ, ராஜேஷ்குமாரைப் பார்த்து தகாதவார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுசம்பந்தமாக ராஜேஷ்குமார் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து ரிஜோவைக் கைது செய்தனர்.