வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
நாகர்கோவிலில் மற்றும் மாவட்டம் முழுவதும் இன்று காலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. காலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக ரோடுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பதியிலும் மழை பெய்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி கோழிப்போர் விளையில் அதிகபட்சமாக 95. 2 மி. மீ மழை பதிவாகியுள்ளது.