நாட்டின் தென்கோடி பகுதியில் உள்ள உள்ள கன்னியாகுமரியில் விவேகானந்தை பாறை, கடற்கரையை தவிர்த்து மேலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. செலவு அதிகம் பிடிக்காத இடமாகவும், பலருக்கும் விருப்பமான இடமாகவும் உள்ள டாப் சுற்றுலா தலங்களை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி போன்ற சுற்றுலா தலங்களை பற்றி பார்க்க போகிறோம்.விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகள், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு குடுபத்துடன் சென்று விசிட் அடிக்க ஆசைப்படுவார்கள். ஆவணி மாதம் பிறந்து விட்டதால் திருமண நிகழ்ச்சிகளுக்காவும், குடும்ப நிகழ்ச்சிக்காகவும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அப்படி செல்லும் போது செலவு அதிகம் பிடிக்காத இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன.தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள டாப் சுற்றுலா தலங்களை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.. இந்தியாவின் தென்கோடி பகுதியாக கன்னியாகுமரி உள்ளது. கன்னியாகுமரியில் நாடு முழுக்க மட்டும் இன்றி வெளிநாட்டினரும் கூட அதிக அளவில் குவிவதை பார்க்க முடியும். கன்னியாகுமரியை பொறுத்தவரை ஆன்மிக பகுதியாகவும் இயற்கையோடு இணைந்த பகுதியாகவும் உள்ளது.
விவேகானந்தர் பாறை: கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் ஒன்றாக இருப்பது விவேகானந்தர் பாறைதான்.. கடலுக்குள் அமைந்துள்ள இந்த விவேகானந்தர் பாறைக்குப் படகுச் சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். விவேகானந்தர் பாறை இருக்கும் இங்குதான் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இடம் உள்ளது.
கன்னியாகுமரியில் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க கூடிய வகையில் அமைந்து இருக்கும். இங்கு காணப்படும் மணல் பரப்புகள், சுற்றுலா பயணிகளை கடற்கரை அழகை ரசித்தபடியே நடந்து செல்ல தூண்டும் வகையில் இருக்கும். இங்கு சூரிய உதயத்தையும், அஸ்தமிக்கும் நேரத்தையும் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். பத்மநாபபுரம் அரண்மனை: கன்னியாகுமரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் பத்மாநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. மரத்தினால் செய்யப்பட்ட நேரத்தியான பல வடிவமைப்புகள் கேரளாவின் தொல்லியல் திறனை பளிச்சிடும் வகையில் அமைந்து இருக்கும்..
திற்பரப்பு அருவி: கன்னியாகுமரியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி. கன்னியாகுமரிக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த அருவி இருக்கும் இடத்திற்கும் விசிட் அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது. இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும், பூங்காவும் உள்ளது. படகு சவாரியும் உள்ளது. காலை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
உதயகிரி கோட்டை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் இந்த உதயகிரி கோட்டை உள்ளது. திருவிதாங்கூர் அரசர்களின் கோட்டையாக இது இருந்துள்ளது. இந்த கோட்டை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள், முயல்கள் உள்ளிட்டவையும் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன