சீனா​, அமெரிக்கா​ கூட்டாளியாக இருக்க வேண்டும்: அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தல்

0
23

சீனா​வும், ​அமெரிக்கா​​வும் போட்​டி​யாளர்​களாக இல்லாமல், கூட்​டாளி​களாக இருக்க வேண்​டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் வலி​யுறுத்​தி​னார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்​பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்​பிங் 3 நாள் அரசு​முறை பயண​மாக அமெரிக்கா சென்​றுள்​ளார்.

அமெரிக்கா சென்​றடைந்​த​போது வெளி​யிட்ட எழுத்​துப்​பூர்வ உரை​யில், சீன மக்​கள் சார்​பில் அமெரிக்க மக்​களுக்கு நல்வாழ்த்துகளை ஜி ஜின்​பிங் தெரி​வித்​தார்.

ஜி ஜின்​பிங் தனது உரை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சீனா​வும், அமெரிக்கா​வும் மிகப்​பெரிய நாடு​கள். இரு நாடு​களின் மக்​களும் சிறப்​பானவர்​கள். இரு நாட்டு மக்​களுக்​கும் இடையே நீண்ட காலமாக நட்​புறவு இருந்து வரு​கிறது. இரு நாடு​களின் நலன்​களும் ஆழமாக ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்​ளன.

சீனா​வும், அமெரிக்கா​வும் போட்​டி​யாளர்​களாக அல்ல, கூட்டாளிகளாக இருக்க வேண்​டும். சீன தேசத்​தின் மறுமலர்ச்சியும், அமெரிக்​காவை மீண்​டும் வலி மை​யான நாடாக உரு​வாக்​கும் முயற்​சி​யும் ஒன்​றுக்​கொன்று இணைந்து செல்ல வேண்​டும். இதன் மூலம் இரு நாடு​களும் பரஸ்​பரம் வெற்றி பெற உதவுவதுடன், உலக மக்​களின் நலனை​யும் மேம்​படுத்த முடி​யும்.

கடந்த மே மாதம் அதிபர் ட்ரம்ப் சீனா வந்​த​போது, இரு நாடுகளுக்கும் இடையே ஆக்​கப்​பூர்​வ​மான மற்​றும் ஸ்திரத்​தன்மை கொண்ட உறவை உரு​வாக்க ஒப்​புக் கொள்​ளப்​பட்​டது. இது இருதரப்பு உறவின் எதிர்​கால வளர்ச்​சிக்கு வழி​காட்​டு​தலை வழங்கி உள்ளது.

சீனா​வும், அமெரிக்கா​வும் ஒரே திசை​யில் செயல்​பட்​டு, ஒத்​துழைப்​புக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் நிலை​யான உறவை உருவாக்க வேண்​டும். கட்​டுப்​படுத்​தக் கூடிய போட்​டி, நிர்வகிக்கக் கூடிய வேறு​பாடு​கள் மற்​றும் அமை​திக்​கான உறுதிப்பாடு​கள் இடம்​பெற வேண்​டும்.

புதிய சகாப்​தத்​தில் சீனா​வும், அமெரிக்கா​வும் இணைந்து வாழ்​வதற்​கான சரி​யான வழியைக் கண்​டறிய வேண்​டும். உலகம் வளர்ந்து வரு​கிறது. கால​மும் மாறி வரு​கிறது. ஆனால், இரு நாடுகளும் அமை​தி​யாக இணைந்து வாழ வேண்​டும் என்ற வரலாற்று அடிப்​படை மாற​வில்​லை. இந்​தப் பயணம் இரு நாட்டு மக்​களின் நலனை மேம்​படுத்​தி, உலக அமை​திக்​கான நம்​பிக்​கையை ஏற்​படுத்​தும் வகை​யில் பயனுள்​ள​தாக அமை​யும். இவ்வாறு அதில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கடந்த 2015-ம் ஆண்​டுக்​குப் பிறகு ஜி ஜின்​பிங் வாஷிங்​ட​னுக்கு மேற்​கொள்​ளும் முதல் பயணம் இது​வாகும். இரு தலை​வர்​களின் பேச்​சு​வார்த்​தை​யில் வர்த்தக வரி​கள், தொழில்​நுட்​பம், செயற்கை நுண்​ணறி​வு, ராணுவ உறவு​கள், மேற்கு ஆசிய மோதல்​கள், ரஷ்யா-உக்​ரைன் போர், விண்​வெளி ஆயுதப் போட்டி மற்​றும் தைவானுக்கு அமெரிக்கா வழங்​கும் ஆயுதங்​கள் உள்​ளிட்ட விவகாரங்​கள் இடம்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here