ரகசிய உறவு – உளவு சர்ச்சை: என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ராஜினாமா

0
31

ரகசிய உறவு, சீன உளவு சர்ச்சையின் எதிரொலியால், என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியை இருந்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்துள்ளார்.

ஜென்சன் ஹுவாங் 33 ஆண்டுகளுக்கு முன்பு இணை நிறுவனராக, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு வித்திட்ட 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சிப் தயாரிப்பு நிறுவனமான என்வியியா-வின் சிஇஓ பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். இதையடுத்து, அந்நிறுவத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“கோலெட் மற்றும் தலைமைத்துவக் குழுவின் மீது இயக்குநர்கள் குழுவுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் தயாரிப்புத் திட்டங்கள் ஆகியவை எந்த இடையூறும் இன்றித் தொடரும்” என்று என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் கூறினார்.

பின்னணி என்ன? – செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக அமெரிக்காவின் என்விடியா உள்ளது. கடந்த அக்​டோபர் மாதம் அமெரிக்​கா​வின் முன்னணி செய்தி நிறுவனம் வெளி​யிட்ட ஒரு செய்​தி​யில், என்​விடி​யா​வின் தலை​மைச் செயல் அதி​காரி ஜென்​சென் ஹுவாங்குக்​கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்​ணுக்​கும் இடையே ரகசிய உறவு இருப்​ப​தாக தகவல் வெளி​யானது.

இதன் தொடர்ச்சியாக, ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஜென்​சென் ஹுவாங் வெளிப்படை​யாக ஒப்புக்கொண்​டுள்​ளார். இதற்​காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்​றும் குழந்தைகளிடமும் அவர் மன்​னிப்பு கேட்​டுள்​ளார். கடந்த 8-ம் தேதி தனது நிறுவன ஊழியர்​களுக்கு அனுப்​பிய மின்னஞ்​சலில், ‘எனது செயல் என் மனைவி மற்​றும் குழந்தைகளை புண்​படுத்தி இருக்​கும். இதற்​காக மிக​வும் வருந்​துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்​பதும் சிங்​கப்​பூரை தலைமையிட​மாகக் கொண்ட மெகாஸ்​பீடு நிறு​வனம் மற்றும் சீன பாது​காப்பு அமைச்​சகத்​துடன் அவர் இணைந்து செயல்​படுவதாக​வும் கூறப்​படு​கிறது. சீனாவுக்கு சில சிப்​களை ஏற்​றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்​துள்ள நிலை​யில், மெகாஸ் பீடு நிறு​வனம் மூலம் என்​விடியா சிப்​கள் சீனா​வுக்கு சென்​றுள்​ளதா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. குறிப்​பாக ஆலிஸ் சீன உளவாளியாக செயல்​பட்​டிருக்​கலாம் என்ற தகவல் வெளியாகி உள்​ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு விசாரணை மேற்​கொண்டு வருகிறது.

இதனிடையே, கடந்த 2 ஆண்​டு​களில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்​பிலான சிப்​களை என்​விடியா நிறு​வனத்​திடம் இருந்து சீன நிறு​வனங்​கள் பெற்றுள்​ள​தாக ‘தி இன்ஃபர்​மேஷன்’ செய்தி வெளியிட்​டுள்​ளது. குறிப்பாக, தடை செய்யப்​பட்ட 2.4 லட்​சம் சிப்கள் (ஹெச்​100, ஹெச்​200) சீனாவுக்கு கொண்​டு​செல்ல ஆலிஸ் உதவிய​தாகக் கூறப்படு​கிறது. ஆலிஸ், தனது சகோ​தரி மற்​றும் கணவருடன் இணைந்​து, என்​விடியா சிப்​களைப் பெறுவதற்​காக சீனா மற்​றும் சிங்கப்​பூர் முழு​வதும் நிறுவனங்​களின் வலையமைப்பை உரு​வாக்​கியதும் தெரிய​வந்​துள்​ளது.

ஆலிஸ் ஹுவாங்குடனான தொடர்பை ஒப்புக்கொண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழியர்களுக்கு ஜென்சன் ஹுவாங் மின்னஞ்சல் அனுப்பியதிலிருந்து, பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 600 பில்லியன் டாலர்கள் வரை சரிந்துள்ளது. இதனிடையே என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு, சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங்கை அறிமுகப்படுத்தி வைத்ததே ஆலிஸின் கணவரும் சீனத் தொழிலதிபருமான காங் வெய் தான் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here