இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை

0
17

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (74), ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ராவல்​பிண்​டி​யின் அடியாலா சிறை​யில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஜனவரி முதல் வலது கண்​ணில் பார்வை குறைபாடு ஏற்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில்,கண் மருத்​துவ நிபுணரின் பரிந்​துரைப்​படி, நவம்​பர் 10 மற்​றும் 11-ம் தேதிக்கு இடைப்​பட்ட இர​வில் இஸ்லாமாபாத்​தில் உள்ள பாகிஸ்​தான் மருத்​துவ ஆராய்ச்சி மற்​றும் சிகிச்சை நிறு​வனத்​துக்கு இம்​ரான் பலத்த பாது​காப்​புடன் அழைத்​துச் செல்லப்பட்​டார். அங்கு பரிசோதனை மேற்​கொள்​ளப்​பட்​டதில் கண் பார்வை மேம்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீண்​டும் சிறைக்கு அனுப்​பப்​பட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here