செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகளை வெளியேற்ற ஈரான் மறுப்பு

0
14

ஈரானில் இருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகள்களை வெளியேற்ற அந்நாட்டு தேசிய பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெசாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

லெபனானை சேர்ந்த ஊடக நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “அமெரிக்க புதிய தாக்குதல் தொடுத்தால் அதற்கான பதிலடியை ஈரான் நிச்சயம் கொடுக்கும். அந்த வகையில் தொலை தூரத்தில் உள்ள அமெரிக்க தளங்களை நாங்கள் குறிவைப்போம்.

இப்போது போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நாங்கள் ஈடுபடவில்லை.

அணுசக்தியில் இயங்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை வடிவமைக்க எங்களுக்கு செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகள்கள் தேவைப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகளை வெளியேற்ற விரும்பவில்லை. அதை நாங்களே பயன்படுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி தளத்தில் 83.7% யுரேனியம் செறிவூட்டப்பட்டிருப்பதை ஐ.நா சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு கடந்த ஆண்டு கண்டுபிடித்தது. அதாவது, கடந்த ஆண்டு ஜனவரியில் ஈரானின் ஃபோர்டோ ஆலையில் சுற்றுச்சூழல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் 83.7% வரை உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் துகள்கள் இருப்பதைக் காட்டியது என்று ஐ.நா சபையின் அணுசக்தி கண்காணிப்பு குழு தெரிவித்தது.

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதனால் மேற்காசியாவில் எரிபொருள் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து செறிவூட்டப்பட்ட அணுசக்தி துகளை வெளியேற்ற ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here