இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 17-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 13-21, 14-21...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் 'சி' பிரிவில் பங்கேற்கும் பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
மொராக்கோ
பயிற்சியாளர்: முகமது உவாஹ்பி
பிஃபா தரவரிசை: 7
தகுதி பெற்ற விதம்: ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் ‘இ’ பிரிவில் முதலிடம் பிடித்து மொராக்கோ அணி உலகக் கோப்பை...
சீனாவின் ஷாங்யூ நகரில் ஜூன் 20, 21-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 2-வது ஆசிய தொடர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக குரிந்தர்வீர் சிங் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தடகள சம்மேளனம் 29 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை நேற்று வெளியிட்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் ஆடவர் 4x400 தொடர் ஓட்டம், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்,...
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தின்போது காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி விலகியுள்ளது.
இந்தப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சாத்விக், ஷிராக் ஜோடியானது, மலேசியாவின் காங் காய் ஜிங், ஆரோன் தாய் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது சாத்விக்கின்...
நார்வே செஸ் போட்டியின் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், முன்னாள் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை (நார்வே) வீழ்த்தினார்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காய்களுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காய்களுடனும் விளையாடினர். இதில் சிறப்பாக காய்களை நகர்த்தி கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர்...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் `பி' பிரிவில் பங்கேற்கும் கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார் ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களமிறங்கும் கனடா
பயிற்சியாளர்: ஜெஸ்ஸி மார்ஷ்.
பிஃபா தரவரிசை: 30
தகுதி பெற்ற விதம்: 2023-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பிஃபா...
இங்கிலாந்து கால்பந்து அணி உலகக் கோப்பையை “100 சதவீதம் வெல்லும் திறன் கொண்டது” என்று நட்சத்திர மிட்ஃபீல்டர் கூபி மைனூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணியின் முன்தயாரிப்பு முகாமில் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பயிற்சியில் பங்கேற்ற மைனூ, சிறுவயது கனவு நனவாகும் தருணத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார்.
தாமஸ் டியூச்செல் தலைமையிலான இங்கிலாந்து அணி, 60 ஆண்டுகால உலகக் கோப்பை வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்து...
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து 25-23, 21-16 தாய்லாந்தின் புசனான் ஓங்பாம்ருங்பனை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 19-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுஷி தனகாவிடமும், இந்திய வீரர் லக்சயா சென் 19-21,...
பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு...
நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை தோற்கடித்தார்.
நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகியோரிடையிலான ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார்....









