நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்
admin - 0
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.
உலகப் புகழ்பெற்ற நார்வே செஸ்தொடர் - 2026, ஆஸ்லோவில் சமீபத்தில் நடைபெற்றது. இதன் கடைசி மற்றும் 10-வது...
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள், அதிக ரன்கள், உலக பவுலர்கள் வீசும் பந்தையெல்லாம் அலட்சியமாக மைதானத்துக்கு வெளியே அனுப்பும் திறன் ஆகியவற்றால் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களையே வாய்ப்பிளக்க வைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பலும் இந்த வாய்ப்பிளப்புக்கு விதிவிலக்கல்ல. ஆனால், இவர் விடுக்கும் எச்சரிக்கை வேறு விதமானது.
தலைமுறைகளுக்கான திறமைதான் சூர்யவன்ஷி இதில் சந்தேகமில்லை. ஆனால், இவரது 15...
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்துள்ளார். தலைமைப் பொறுப்பு என்பது தனக்குக் கிடைத்த ஒரு சிறந்த சவால் என்று குறிப்பிட்டுள்ள அவர், யாருடைய நிழலிலும் ஒடுங்கிப் போகாமல், எப்போதும் தனக்கே உரித்தான தனித்துவமான பாணியில் அணியை வழிநடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரேயஸ் ஐயர், தனது சிறுவயது கிரிக்கெட்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நியூ சண்டிகரிலுள்ள முலான்பூர் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய...
தைபேசி சிட்டியில் நடைபெற்ற நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியின் ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீன தைபேயிலுள்ள நியூ தைபே நகரில் இந்த தடகளப் போட்டி நேற்று நடைபெற்றது. 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 20.47 விநாடிகளில் ஓடிவந்து 2-வது இடம் பிடித்தார். இதேபிரிவில் தாய்லாந்து வீரர் புரிபோல்...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘எஃப்’ நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனீசியா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து
பயிற்சியாளர்: ரொனால்டு கோமென்.
பிஃபா தரவரிசை: 8
தகுதி பெற்ற விதம்: ஜி பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற நெதர்லாந்து அந்தப் பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது....
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
29 வயதான ஸ்வெரேவ், டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு வரை இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பட்டம் வென்றது இல்லை. அமெரிக்க ஓபன் இறுதி, ஆஸ்திரேலிய ஓபன் இறுதி, விம்பிள்டனில் நான்காவது சுற்று வரை விளையாடி உள்ளார்.
இந்த...
இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார். அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும் காத்திருக்கும் என்று என்று போர்ச்சுகல் அணியின் முன்னாள் கோல்கீப்பர் ரிகார்டோ பெரைரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி வரும் 11-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப்...
கிங்ஸ்டன் ஜமைக்கா, சபைனா பார்க்கில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மே.இ.தீவுகள் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்து பெரும் தவறிழைத்தது. கேப்டன் குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ரன்களை விளாசி இலங்கை அணிக்கு புதிய சக்தி கொடுத்தார். மற்றும் பதுன்...
ஆப்கானிஸ்தான் அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் விராட் கோலி...









