பாகிஸ்தான் பயிற்சியாளராகிறார் தென் ஆப்பிரிக்காவின் மைக் ஸ்மித்

0
21

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட உள்ளார்.

லெவல்-4 பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஸ்மித், டி 20 கிரிக்கெட் தொடர்களில் பரந்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலில் இருந்து மைக் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடனான ஒப்பந்தம் வாய்மொழியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்மாத இறுதியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மைக் ஸ்மித், பாகிஸ்தான் அணியுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இடைக்கால பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் அணி தேர்வாளர் அசாத் ஷாஃபிக்கிற்குப் பதிலாக ஸ்மித் பொறுப்பேற்பார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here