சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி: உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினார்
admin - 0
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 3-வது நாளான நேற்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
மாஸ்டர்ஸ் பிரிவில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அமீன்தபதாபேயி 38-வது நகர்த்தலின்போது வெற்றியை வசப்படுத்தினார். 2-வது போர்டில் இந்தியாவின் விதித்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய...
சென்னை: ஆடவருக்கான 14-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா ஜம்மு&காஷ்மீர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணி தரப்பில் நிஷாந்த் (22-வது நிமிடம்), பிரேம்குமார் (24-வது நிமிடம்), தேஷ்வின் விஜு (33-வது நிமிடம்), மோஹித் குஷ்வாஹா (60-வது நிமிடம்) ஆகியோர்...
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓர் இடம் பின்தங்கி 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ்...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா
admin - 0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் அமீன் தபதாபேயி 45-வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான...
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது.
இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜராத்தியை 5 மணி நேரம் போராடி வென்றார் அர்ஜுன் எரிகைசி
admin - 0
இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைச் சேர்ந்த விதித் குஜராத்தியுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி கருப்பு காய்களுடனும், விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.
இதில் 96-வது நகர்த்தலின் போது அர்ஜுன் எரிகைசி வெற்றியை...
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியது இந்தியா
admin - 0
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத முறைசாரா உரையாடலுக்குப் பிறகு ஒரு லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.
இந்த கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த அக்டோபர்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் முகமது ரிஸ்வான் 44, பாபர் அஸம் 37, இர்பான் கான் 22, ஷாகீன் ஷாஅப்ரிடி 24 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் நசீம் ஷா 39 பந்துகளில்,...
31 அணிகள் கலந்து கொண்டுள்ள ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்தி இரு கோல்கள் அடித்தார் (16 மற்றும் 57-வது நிமிடம்). செல்வராஜ் கனகராஜ் (21-வது நிமிடம்),...









