ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி.
ராஜ்கோட்டில் நடைபெற்று வந்த கால் இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் குஜராத் அணி 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 140, ஜெய்மீட் பட்டேல் 103 ரன்கள் விளாசினர். 295 ரன்கள்...
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3-வது டபிள்யூபிஎல் சீசன் போட்டிகள் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா...
ரோஹித் சர்மா அசத்தல் சதம்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | IND vs ENG 2-வது ODI
admin - 0
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. கேப்டன் ரோஹித் சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள்...
டி20 கிரிக்கெட்டில் அதாவது சர்வதேச டி20 ஆயினும் தனியார் டி20 லீகுகளாயினும் ஒரே ஒரு கிங் பவுலர் என்றால் அது ரஷீத் கான் என்று தைரியமாகக் கூறிவிடலாம், அவர் அருகில் இருப்பவர் மே.இ.தீவுகளின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ மட்டுமே.
மற்றபடி ஸ்பின்னர்கள் யாரும் ரஷீத் கானுக்கு அருகில் இல்லை. இந்நிலையில் 4 ஆண்டுகள் ஆடினால், உடற்தகுதியுடன் இருந்தால் டி20 கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய அபூர்வ...
ஐஎஸ்எல் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின. இதில், சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
21-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத் வாத்திடம் கிராஸை பெற்ற வில்மர் ஜோர்டான் கில், கோல்கம்பத்துக்கு நெருக்கமாக இருந்தபடி அடித்த பந்து கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 2-0 என்ற...
பாஸ்பால் மாயையில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்து ஆஷஸ் ஒன்றையே, கொக்கிற்கு ஒன்றே மதி என்று மனதில் கொண்டு மற்ற தொடர்களை ஏனோதானோவென்று ஆடி தொடர் தோல்விகளைச் சந்திப்பதை ஒரு பெருந்தன்மையாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக 2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் சொதப்பியது, அதன் பிறகு மே.இ.தீவுகளில் இரண்டு தொடர்களை இழந்தது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இழந்தது. இப்போது இங்கிலாந்தின் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் மெக்கல்லம்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இருவருக்கும் காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாக்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்களான பில் சால்ட், பென் டக்கெட் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 6-வது ஓவரில் பில் சால்ட் 3 சிக்ஸர்கள்,...
இந்திய ஒருநாள் அணியில் துணைக் கேப்டனான ஷுப்மன் கில், தனக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே ‘நச்சுப் போட்டி’ எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அபிஷேக் சர்மா டி20-யில் அன்று காட்டடி சதமெடுத்து ஏகப்பட்ட டி20 சாதனைகளை உடைத்த பிறகே அபிஷேக் சர்மாவை மீடியாக்கள் தூக்கி விடத் தொடங்கியுள்ளன.
இது அபிஷேக் சர்மாவுக்கு நல்லதல்ல. அவர் கால்கள் நகர்வதில்லை, அவர் அதை கவனித்து உத்தி...
மணிக்கு 154 கி.மீ வேகம் வரை வீசக்கூடிய ஐபிஎல் கண்டுப்பிடிப்பான மயங்க் யாதவ், 2025 ஐபிஎல் சீசனிலிருந்து அப்படியே இந்திய அணி வரை நீண்ட தூரம் இடைவெளி இல்லாமல் செல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆலோசகர் ஜாகீர் கான் இருவரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவின்...









