இந்தியா யு-19 மற்றும் ஆஸ்திரேலியா யு-19 கிரிக்கெட் அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா யு-19 அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா யு-19 அணி 315 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 43.5 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா...
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகைகளை முதல்வர் விஜய் உடனுக்குடன் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இவ்வீரர்களை நேரில் அழைத்து கவுரவிக்கும் வகையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் முதல்வர் விஜய் இன்று இரவு சிறப்பு விருந்து அளிக்கிறார்.
இந்த நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள்...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 2026-27 சீசனில் நடைபெறும் 163 போட்டிகளையும் யூடியூப்பில் இலவசமாக நேரலையில் காணலாம் என்று ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் சீசனில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. முதல் கட்டத்தில் வரும் அக்டோபர் 10 முதல் 2027-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை 78 போட்டிகள் நடைபெற உள்ளன.
“பதக்கம், சாதனைகள் முக்கியம் கிடையாது; 53 விநாடிகளில் இலக்கை எட்ட வேண்டும்” – வித்யா ராம்ராஜ் நேர்காணல்
admin - 0
ஜப்பானில் முடிவடைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இதில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலக்கை 54.75 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் 42 வருட...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி லக்னோவிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார் நமன் திர். முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாய் ஹோப், கமில் பூரன் ஆகியோர் களமிறங்கினர். கமில் பூரன் 12 ரன்களில் வீழ்ந்தார். ஷிம்ரன்...
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய 6 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் தங்களது போட்டி நடத்தும் திட்டங்களை வரும் நவம்பர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) எதிர்கால போட்டிகளை நடத்தும் தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒலிம்பிக்...
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் இயக்குநரான விவிஎஸ் லட்சுமண் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் கேப்டன்ஷிப்பை லட்சுமண் வெகுவாக பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர், பிசிசிஐ டி.வி.க்கு அளித்துள்ள நேர் காணலில் கூறியிருப்பதாவது:...
நீள்நெடும் போராட்டத்திற்குப் பிறகு அபாரமான உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் ஆட்டங்களில் திறமையை நிலைநாட்டிய புவனேஷ்வர் குமாரை மீண்டும் இந்திய அணிக்கு அழைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆம்! இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புவனேஷ்வர் குமாரை மீண்டும் அணிக்கு அழைத்துள்ளது.
36 வயதான புவனேஷ்வர் குமார், 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டிக்குப் பிறகு...
அர்ஜென்டினா அணிக்காக தனது 208-வது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி, தனது 126-வது சர்வதேச கோல் மற்றும் 2 உதவிகளுடன் அசத்தி, உணர்ச்சிகரமான முறையில் சர்வதேச கால்பந்து பயணத்துக்கு விடை கொடுத்தார்.
பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மோனுமென்டல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பெனின் அணிக்கு எதிராக நடைபெற்ற நட்பு ஆட்டம், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் “கடைசி டாங்கோ” என வர்ணிக்கப்பட்டது. 21 ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக...
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று அதிகாரப்பூர்வ ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ளார். அவருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.









