ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதன்படி செப்டம்பர் 13 முதல் 17 வரை டி 20 தொடர் நடைபெறும். 17-ம் தேதி முதல் போட்டியும், 15-ம் தேதி 2-வது போட்டியும், கடைசி மற்றும் 3-வது போட்டி 17-ம் தேதியும் நடைபெறும். இந்தத் தொடரின்...
டிஎன்பிஎல் டி20 தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 35 பந்துகளில்,...
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் தம்பதியாயினர். போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பு அமைப்பான ‘பிரன்ஸ்விக் குரூப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவர்கள் நேற்று முன்தினம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தங்களது ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்ட இந்தத் திருமணம், மிகவும் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகில் உள்ள கடலோர நகரமான காஸ்காய்ஸில் இந்த திருமண நிகழ்ச்சி...
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ரசிகர்களுக்கு மிகவும் வேதனை தரும் விதமாக 3-வது முறையாக உலகக் கோப்பை நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது. அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு மேற்கு இந்தியத் தீவுகள் நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் தொடர்ந்து 3-வது...
காமன்வெல்த் விளையாட்டு பாராட்டு விழாவில் சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையே வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் இல்லத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நரேந்தர் பெர்வால்,...
டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் மனாஸ் தாம்னே அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தகுதி சுற்று 2-ல் இந்திய அணி, தென் கொரியாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் செப்டம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சியோல் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய அணியில்...
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா நேற்று தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடினார். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் அவர், சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபிடே தனது எக்ஸ் வலைதள பதிவில், “தனது 12-வது வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றி, அந்த காலகட்டத்தில் உலக வரலாற்றிலேயே இப்பட்டத்தைப்...
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சர்ஃபராஸ் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “நான் இந்த அமைப்பில் பொருந்திப்போகாமல் இருக்கலாம். ஆனால், என்னிடம் இருக்கும் அத்தனை பலத்தையும் கொண்டு கடைசி வரை போராடுவேன்!” எனக் கூறியிருந்தார். அது வெறும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் மட்டுமல்ல. அன்றைய சூழலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அவருக்கான வாய்ப்புகள் எவ்வளவு மங்கலாக இருந்தன என்பதை...
இலங்கை பிரதமர் லெவன் அணிக்​கெ​தி​ரான 3 நாள் ஆட்​டத்​தில் இந்​திய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​திய வீரர்​கள் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், முகமது சிராஜ் அபார​மாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். கொழும்பு நகரில் உள்ள நான்​டிஸ்​கிரிப்ட்ஸ் கிரிக்​கெட் கிளப் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இலங்கை பிரதமர் லெவன் அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 363...
கிரிக்​கெட் வீரர்​களுக்கு முன்​மா​திரி​யாக இருக்கிறார் இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் விராட் கோலி என்று இந்​திய அணி​யின் முன்​னாள் வீரரும், பெங்​களூரு​விலுள்ள பிசிசிஐ திறன்​மிகு பயிற்சி மைய (சிஓஇ) தலை​வரு​மான விவிஎஸ் லஷ்மண் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பெங்​களூரு​வில் நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் விவிஎஸ் லஷ்மண் கூறிய​தாவது: இந்​திய அணி​யின் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னாக இருக்​கும் விராட் கோலி ஒரு சிறந்த தொழில்​முறை வீர​ராகத் திகழ்​கிறார். அதில் எந்​த​வித சந்​தேக​மும் இல்​லை. விராட்...