கடைசி ஓவர்களில் அசாத்தியமான பந்து வீச்சு: டெல்லி கேப்டன் அக்‌ஷர் படேல் பாராட்டு

0
18

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட்​கள் இழப்​புக்கு 193 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக துருவ் ஜூரெல் 53, கேப்​டன் ரியான் பராக் 51, வைபவ் சூர்​ய​வன்ஷி 46 ரன்​கள் சேர்த்​தனர்.ஒரு கட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி 14 ஓவர்களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் குவித்து வலுவாக இருந்​தது. இதனால் அந்த அணி 220 முதல் 240 ரன்​களை எளி​தாக குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

ஆனால் கடைசி 6 ஓவர்​களில் டெல்லி அணி​யின் பந்து வீச்சாளர்கள் அற்​புத​மாக செயல்​பட்டு 5 விக்​கெட்​களை வீழ்த்தியதுடன் வெறும் 33 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்தனர். இதில் 15-வது ஓவரை வீசிய மிட்​செல் ஸ்டார்க் 6 ரன்களை மட்​டும் வழங்கி 3 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​னார். அடுத்த ஓவரில் அக் ஷர் படேல் 5 ரன்​கள் விட்​டுக்​கொடுத்​தார். 17-வது ஓவரில் திவாரி 3 ரன்​களை மட்​டும் வழங்கி ஷுபம் துபேவை வெளி​யேற்​றி​னார்.

18-வது ஓவரில் லுங்கி நிகிடி 8 ரன்​களை வழங்​கி​னார். அடுத்த ஓவரை வீசிய மிட்​செல் ஸ்டார்க் 6 ரன்​களை கொடுத்த நிலை​யில் தசன் ஷனகாவை அவுட்​டாக்​கி​னார். கடைசி ஓவரை வீசிய லுங்கி நிகிடி 5 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து துருவ் ஜூரெல் விக்கெட்டை சாய்த்​தார். ஒட்​டுமொத்​த​மாக மிட்​செல் ஸ்டார்க் 4, லுங்கி நிகிடி 2, மாதவ் திவாரி 2 விக்​கெட்​களை வீழ்​த்தினர். 194 ரன்​கள் இலக்கை துரத்​திய டெல்லி அணி 19.2 ஓவர்​களில் 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 197 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

அபிஷேக் போரெல் 51, கே.எல்​.​ராகுல் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இந்த கூட்​டணி முதல் விக்​கெட்​டுக்கு 105 ரன்​கள் விளாசி அசத்​தி​யது. டெல்லி அணிக்கு 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளை​யாடி 6 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 12 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெறு​வதற்கு மெல்​லிய வாய்ப்பை பெற்​றுள்​ளது.

அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் வரும் 24-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்​தில் டெல்லி அணி வெற்றி பெற்​றால் அதி​கபட்​ச​மாக 14 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை நிறைவு செய்​யும். இது நிகழ்ந்​தா​லும் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி​களை பொறுத்து டெல்லி அணி​யின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.

ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் கேப்​டன் அக் ஷர் படேல் கூறிய​தாவது: நாங்​கள் நடு ஓவர்​களில் சிறப்​பாக பந்​து​வீசி மீண்டு வந்​தோம். கடைசி ஆறு ஓவர்​களில் எங்​களது பந்​து​வீச்சு அசாத்​தி​ய​மான தரத்​தில் இருந்​தது. எங்​கள் பந்​து​வீச்சு கூட்​டணி விட்​டுக்​கொடுக்காத மனப்​பான்​மை​யுடன் செயல்​பட்​டது. மிட்​செல் ஸ்டார்க் அற்புத​மாக செயல்​பட்​டார்.

சொந்த மண்​ணில் வெற்றி பெறு​வது எப்​போதுமே தனிச்​சிறப்புதான். நாங்​கள் ஒரு விஷ​யத்​தில் மேம்​பட்​டுள்​ளோம். இதற்கு முன்பு நாங்​கள் கொத்​தாக விக்​கெட்​டு​களை இழந்து வந்தோம். ஆனால் இந்த ஆட்​டத்​தில் தொடக்க வீரர்​கள் அற்புதமாக செயல்​பட்​டனர். அது மற்ற பேட்​டர்​களுக்​குப் பெரிதும் உதவி​யாக இருந்தது. இவ்​வாறு அக்​ ஷர்​ படேல்​ கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here