மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி: ஸ்ரேயஸ் ஐயர் விளாசலில் இந்தியா அபார வெற்றி

0
10

இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி லக்​னோ​விலுள்ள பாரத ரத்னா ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்​பாய் ஏகானா கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த போட்​டி​யில் இந்​திய அணி​யில் அறி​முக வீர​ராக களமிறங்​கி​னார் நமன் திர். முதலில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி பேட்​டிங் செய்​தது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ஷாய் ஹோப், கமில் பூரன் ஆகியோர் களமிறங்​கினர். கமில் பூரன் 12 ரன்​களில் வீழ்ந்​தார். ஷிம்​ரன் ஹெட்​மயர் 5, ரோவ்​மன் பாவெல் 0, ராஸ்​டன் சேஸ் 5, ரொமாரியோ ஷெப்​பர்ட் 7, மேத்யூ போர்ட் 2, ஷமார் ஸ்பிரிங்​கர் 9, அகீல் ஹொசைன் 15 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் ஷாய் ஹோப் அதிரடி​யாக விளை​யாடி 37 பந்​துகளில் 6 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 52 ரன்​கள் சேர்த்​தார்.

ஷெர்​பான் ருதர்​போர்ட் 34 பந்​துகளில் 6 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களை விளாசி 56 ரன்​களைக் குவித்​தார். இந்​திய அணி தரப்​பில் நமன் திர் 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். குல்​தீப் யாதவ், அக்​சர் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், மயங்க் யாதவ், அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் சாய்த்​தனர்.

இதைத் தொடர்ந்து 172 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பேட் செய்த இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட் களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், இஷான் கிஷன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சஞ்சு சாம்சன் 11, அபிஷேக் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here