சாண்ட்பேப்பர் விவகாரம் ஆஸி. அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும்: கேமரூன் பேன்கிராஃப்ட் குற்றச்சாட்டு

0
17

தென் ஆப்​பி​ரிக்​கா​வில் கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற டெஸ்ட் தொடரின்​போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்​கிராஃப்ட் ‘சாண்ட்​பேப்​பர்’ மூலம் பந்தை சேதப்​படுத்​தி​யது கேம​ராவில் பதிவானது. இந்த விவகாரத்​தில் அப்​போதைய கேப்​டன் ஸ்​டீவ் ஸ்​மித், துணை கேப்​டன் டேவிட் வார்​னர், பேன்​கிராஃப்ட் ஆகியோர் மீது நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இது​தொடர்​பாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி​யின் முன்​னாள் வீரர் உஸ்​மான் கவாஜா எழுதிய புத்​தகத்​தில், 2018-ம் ஆண்டு நடை​பெற்ற சம்​பவம் அணி​யில் உள்ள அனைவருக்​கும் தெரிந்த விஷயம்​தான் என கூறி​யிருந்​தார். இது ஆஸ்திரேலிய கிரிக்​கெட் வாரியத்​தில் மீண்​டும் புயலை உரு​வாக்கி உள்​ளது. இந்​நிலை​யில், இந்த விவகாரம் குறித்து பேன்​கிராஃப்ட் இணை​யதளம் ஒன்​றில் எழுதி​யுள்ள கட்​டுரையில் கூறி​யிருப்​ப​தாவது:

கடந்த 8 ஆண்​டுகளாக இந்த விவகாரத்​தின் முழுப் பொறுப்​பையும் நானே சுமந்​தேன். எனது சக்​திக்கு மீறிய மிகப்​பெரிய சுமையாக அது இருந்​தது. அனைவருக்​காகவும் நானே பழியை ஏற்​றுக்​கொண்​டேன். அது எனது சொந்த முடிவாகும். ஆனால், 2018-ம் ஆண்​டில் முழு உண்​மையும் வெளிப்​படுத்​தப்​பட​வில்லை. இந்த விவகாரம் ஒட்​டுமொத்த அணிக்​கும் தெரியும்.

அப்​போது பந்தை சேதப்​படுத்​தும் பணி​யைச் செய்ய முடியுமா என்று என்​னிடம் கேட்​கப்​பட்​டது. அது தவறு என்​பது எனக்​குத் தெரியும். ஒட்​டுமொத்த அணி​யின் நலனுக்​காகவும், போட்​டி​யில் வெற்றி பெற வேண்​டும் என்​ப​தற்​காகவும் நாங்​கள் அனைவரும் இணைந்தே இதைச் செய்​தோம். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here