ஐபிஎல் 2027-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 17-ம் தேதிக்குள் (நேற்று) சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டன. அதன் விவரம்:
சிஎஸ்கே: எம்.எஸ்.தோனி (ஓய்வு), பிரஷாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி, ஜாக் ஃபோக்ஸ், அமான் கான், குல்திப் யாதவ், ஆகாஷ் மத்வால், தியான் ஃபாரஸ்டர், மெக்நெய்ல் நோரோன்கா, ஸ்பென்சர் ஜான்சன்.
>> மீதமுள்ள தொகை: ரூ.28.05 கோடி, மீதமுள்ள இடம்: 6
மும்பை: டிரெண்ட் போல்ட், தீபக் ஷாகர், ஏஎம் காஸன்ஃபர், அதர்வா அங்கோல்கர், கேசவ் மகாராஜ், முகமது இஷாகர், டேனிஷ் மலேவர், மயங்க் மார்க்கண்டே, மயங்க் ராவத், கிரிஷ் பகத், மகிபால் லாம்ரோர், ராபின் மின்ஸ், ருச்சித் அஹிர்.
>> மீதமுள்ள தொகை: ரூ.32.60 கோடி, மீதமுள்ள இடம்: 9
ஆர்சிபி: ஜேக்கப் பெத்தேல், ரிச்சர்டு கிளெஸ்சன், மங்கேஷ் யாதவ், விஹான் மல்ஹோத்ரா, சாத்விக் தேஷ்வால், ஸ்வப்னில் சிங்.
>> மீதமுள்ள தொகை: ரூ.14.15 கோடி, மீதமுள்ள இடம்: 5
ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், ஜெயதேவ் உனத்கட், தில்ஷான் மதுஷங்கா, ஆன்கர் தர்மலே, ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், ஷிவம் மாவி, ஜெரால்டு கோட்ஸி, டேவிட் பையின்.
>> மீதமுள்ள தொகை: ரூ.35.15 கோடி, மீதமுள்ள இடம்: 7
டெல்லி கேப்பிடல்ஸ்: மிட்செல் ஸ்டார்க், நிதிஷ் ராணா, அபிஷேக் போரல், பதும் நிஷங்கா, கருண் நாயர்,சாஹில் பரேக், துஷ்மந்தா சமீரா, ரேஹான் அகமது.
>> மீதமுள்ள தொகை: ரூ.39.50 கோடி, மீதமுள்ள இடம்: 9
பஞ்சாப்: லாக்கி பெர்குசன், மிட்செல் ஓவன், நேஹால் வதேரா, பைலா அவினாஷ், பர்வீன் துபே, விஷால் நிஷாத்.
>> மீதமுள்ள தொகை: ரூ.18.60 கோடி, மீதமுள்ள இடம்: 6
குஜராத் டைட்டன்ஸ்: இஷாந்த் சர்மா, லூக் வூட், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷாருக் கான், கானர் எஸ்டெர்ஹூய்சன், பிரித்விராஜ் யாரா.
>> மீதமுள்ள தொகை: ரூ.3.75 கோடி, மீதமுள்ள இடம்: 3
கொல்கத்தா: அஜிங்க்ய ரஹானே, ஆகாஷ் தீப், பிளஸ்ஸிங் முசரபானி, தக் ஷ் கம்ரா, லுவ்னித் சிசோடியா, மதீஷா பதிரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான், நவ்தீப் சைனி, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, தேஜஸ்வி சிங், உம்ரான் மாலிக்.
>> மீதமுள்ள தொகை: ரூ.41.65 கோடி, மீதமுள்ள இடம்: 8
ராஜஸ்தான்: ஆடம் மில்னே, குவேனா மபாகா, துஷார் தேஷ்பாண்டே, குல்தீப் சென், யுத்வீர் சாரக், விக்னேஷ் புதூர், ரவி சிங், ஷிம்ரன் ஹெட்மையர், இமான்ஜோத் சாஹல்.
>> மீதமுள்ள தொகை: ரூ.22.05 கோடி, மீதமுள்ள இடம்: 6
லக்னோ: மேத்யூ பிரீட்ஸ்கே, அவேஷ் கான், அன்ரிச் நோர்க்கியா, ஜார்ஜ் லிண்டே, வனிந்து ஹசரங்கா, நமன் திவாரி, ஹிமாத் சிங்.
>> மீதமுள்ள தொகை: ரூ.47.45 கோடி, மீதமுள்ள இடம்: 7














