பாமகவின் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இருவரிடமும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, கட்சியில் இருந்து...
தமிழகம் முழுவதும் கட்சி கொடிக் கம்பங்களை ஜூலை 2-க்குள் அகற்றாவிட்டால் ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
admin - 0
சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது...
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 6,040 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவானது நேற்று விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா, இறுதி கட்டமாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தவெக.தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில், சேலம்...
நடிகர் விஜய்யை சந்தித்து பேசவில்லை என்று ஜாக்டோ-ஜியோ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு, தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் பேரமைப்பாகும்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறுவது போன்ற கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது. இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உட்பட கோரிக்கைகளுக்காக மத்திய...
மெட்ரோ ரயில் இணைப்பு பால கர்டர் இடிந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்: நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது
admin - 0
மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மொத்தம் 10 முதல் 13 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்பிறகு, நாளை (ஜூன் 17) விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில்...
12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது....
ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் முருகா, வீரவேல் என்ற முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். திமுகவின் ஆட்சி 8 மாதங்களுக்கு பிறகு இருக்காது.
தமிழகத்தில்...
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு அரங்கில் முருகனின் அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று தொடங்குகிறது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல்...
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக மாவட்டத்தில் 4 தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15-ம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அந்தந்த பகுதிகளுக்கு...









