அஜித்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையே போதும்: குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் வலியுறுத்தல்
admin - 0
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதம் ஏற்படும். எனவே, நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து தமிழக முதல்வர்...
அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன், ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில்...
மதுரை எய்ம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ராணி குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று, ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணி தொடங்கப்பட்டு,...
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின்...
சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்
admin - 0
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர்.
சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால்,...
தெற்கு ரயில்வேயில் சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஓரமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே இத்தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க...
ரூ.112 கோடியில் நலவாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
admin - 0
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடியில் அமைக்கப்பட்ட 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடியில் அமைக்கப்பட்ட 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நகர்ப்புறங்களில் மக்கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை...
செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
admin - 0
மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021- 23 காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது....
‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ – அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?
admin - 0
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு பாஜக...
திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
admin - 0
காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில்...










