சுற்​றுச்​சூழல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பட்​டினப்​பாக்​கம் மற்​றும் நீலாங்​கரை கடற்​கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனு​ம​திக்க முடி​யாது. சிலைகளை வேறு இடங்​களுக்கு அனுப்ப வேண்​டும் என்று தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. விநாயகர் சதுர்த்​தி​யை யொட்​டி, நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​ப​தால் மாசு ஏற்​படு​கிறது. அறிவிக்​கப்​ப​டாத நீர்​நிலைகளில் சிலைகளை கரைப்​பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும் என கோரி சென்னை புதுப்​பேட்​டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்​பவர் தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென்...
மின்வாரியத்தில் கருணை அடிப்​படை​யில் பணி நியமனத்​துக்கு ஊழியர்​களின் மருத்​து​வச் சான்​றிதழை கட்​டா​யம் சமர்ப்​பிக்க வேண்​டும் என்று மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அனைத்து தலைமை பொறி​யாளர்​களுக்​கும் மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: கருணை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு கோரும் விண்​ணப்​ப​தா​ரர்​களின் சட்​டப்​பூர்வ வாரிசுகளை பரிசீலிக்​கும்​போது, வாரிய சேவை விதி எண் 84-ன் கீழ் பரிந்​துரை செய்​யப்​பட்ட படிவத்​திலேயே, ஊழியரின் மருத்​து​வச் சான்​றிதழ் சமர்ப்​பிக்​கப்பட வேண்​டும். மேலும், 55 வயதுக்கு உட்​பட்ட ஊழியர்​களுக்கு வயது முதிர்​வு,...
 “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என மின்வெட்ட்டுப் பிரச்சினை குறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது....
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஐபிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் இல்லாத சூழலால் ‘பாஸ்’ விநி யோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதியில்...
மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் தனது உடலை தகனம் செய்ய விரும்பியிருந்ததால், அதன்படி தகனம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்சலி...
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்​வர், அங்​கிருந்து மற்​றொரு விமானத்​தில் லண்​டன் சென்​றார். லண்​டனில் முதலீட்​டாளர்​கள் சந்​திப்​பில் பங்​கேற்​கும் முதல்​வர் விஜய், பல்​வேறு தொழில் நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​களைச் சந்​தித்​து, தமி​ழ​கத்​தில் தொழில் தொடங்க வரு​மாறு அழைப்பு விடுக்க உள்​ளார். லண்​டனில் உள்ள புகழ்​பெற்ற ‘சில்​வர்​ஸ்​டோன்...
மிசா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டது குறித்து சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் பேசி​யதற்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் விளக்​கம் அளித்​துள்​ளார். “இன்​றைக்​கும் நான் அடி​வாங்​கிய தழும்​பு​கள் எனக்கு இருக்​கின்​றன. யார் கொச்​சைப்​படுத்​தி​னாலும் வரலாற்றை மாற்ற முடி​யாது” என்று அவர் தெரி​வித்​துள்​ளார்​. இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: எமர்​ஜென்சி காலத்​தில் மிசா சட்​டத்தை கருணாநிதி எதிர்த்​த​தால், அன்​றிருந்த மத்​திய அரசு திமுக ஆட்​சி​யைக் கலைத்​தது. உடனடி​யாக, மிசா சட்​டத்​தில் என்​னைக்...
​வாரத்​தில் 5 நாட்​கள் வேலை என்​பது உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்​தி, வங்கி ஊழியர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​தில் ஈடு​படு​கின்​ற​னர். இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அகில இந்​திய வங்கி ஊழியர்​கள் சங்க பொதுச் செய​லா​ள​ரும், வங்கி ஊழியர் சங்​கங்​களின் ஐக்​கிய மன்ற ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சி.எச்​.வெங்​க​டாச்​சலம் கூறிய​தாவது: கடந்த 2024 மார்ச்​சில் கையெழுத்​தான இருதரப்பு ஒப்​பந்​தத்​தில், வாரத்​தின் அனைத்து சனிக்​கிழமை​களை​யும் விடு​முறை​யாக அறிவிக்க வங்கி நிர்​வாகங்​கள் சம்​ம​தித்​தன. இதற்​காக, திங்​கள் முதல் வெள்ளி...
கொளத்தூர் தவெக எம்​எல்ஏ வி.எஸ்​.​பாபு திடீரென ஏற்​பட்ட மூச்​சுத்​திணறல் காரண​மாக சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை எதிர்த்து தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்​றவர் வி.எஸ்​.​பாபு. கடந்த ஒரு மாத கால​மாக நடந்து முடிந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரில் பங்​கேற்று வந்த அவருக்​கு, கடந்த சில நாட்​களாக மார்பு சளி பாதிப்பு அதி​க​மாக இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் தனது வீட்​டில் ஓய்​வில் இருந்த வி.எஸ்​.​பாபுவுக்கு...
காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் அருகே மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையோரம் உள்ள இந்த கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தின் மேல்தளம் அமைக்கும் பணி நேற்று நடை பெற்றது. இதில்,...