வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் – மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்
admin - 0
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.) ஒன்றாகும்.
இத்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும்...
மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டதால் சர்ச்சை
admin - 0
மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
தமிழக முதல்வரை, பல்வேறு காரணங்களுக்காக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கியமான தனிநபர்கள் சந்திப்பது வழக்கம். அவ்வாறு சந்திக்கும் போது, தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் புகைப்படம், செய்தி வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்யை, நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான படங்கள் அரசு செய்தித் துறையால் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, நேற்று பிற்பகல்...
பழவேற்காடு கடலில் மீன்பிடி வலையில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது
admin - 0
பழவேற்காடு பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு, அதையொட்டி உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன் தினம் இரவு, பழவேற்காட்டை அடுத்த பசியாவரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் (35), 4 பேருடன் பழவேற்காடு பகுதியில், வங்காள விரிகுடா...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு
admin - 0
தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான புகாரை கூட்டுறவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இருவாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ. வெங்கடேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகம் முழுவதும் உள்ள மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்...
தோல்விக்கான காரணம், தற்போதைய அரசியல் சூழல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை சென்னை...
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றச் சூழல் காரணமாகவும், ஹார்முஸ் நீரிணை வழியான வணிகக் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது...
மின்சாரத் துறையின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.நிர்மல் குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், மின்துறை செயலர் மங்கத் ராம் சர்மா, மின் வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ.சித்திக் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண் டனர்.
இக்கூட்டத்தில், மாநிலத்தின் மின் உற்பத்தி, மின்தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலக்...
விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராக வேண்டும் என சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு அவர் வேண்டுதல் வைத்திருந்தார். இதன்படி விஜய் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடந்த நிலையில், நகரி சாலையில்...
ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததன் எதிரொலி: காக்களூர், புட்லூரில் 75 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
admin - 0
காக்களூரில் ஒரே நாளில் 18 பேரை தெரு நாய் கடித்ததை அடுத்து நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், காக்களூர், புட்லூர் பகுதிகளில் 75 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டது; 10 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஊராட்சி பகுதிகளில் கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்களில் ஒன்று நேற்று முன் தினம் சாலையில் சென்ற 18 பேரை கடித்தது....










