ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை: உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

0
18

தோல்விக்​கான காரணம், தற்​போதைய அரசி​யல் சூழல் குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஆலோ​சனை நடத்​தி​னார். இதில் உதயநி​தி, கனி​மொழி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக ஆட்​சியை இழந்​துள்ள நிலை​யில் தோல்விக்​கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த குழு​வினர் ஒவ்​வொரு தொகு​திக்​கும் சென்று தேர்​தல் தோல்விக்​கான காரணங்​கள் குறித்து கள ஆய்வு செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திமுக தலை​வர் ஸ்டா​லின் நேற்று காலை சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதில் திமுக துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி, இளைஞரணி செய​லா​ளர் உதயநி​தி, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, செய்​தித் தொடர்பு குழு தலை​வர் டி.கே.எஸ். இளங்​கோவன் மற்​றும் பலர் கலந்து கொண்​டனர்.

தற்​போதைய அரசி​யல் சூழ்​நிலை குறித்​தும் திமுக​வில் அடுத்​தகட்​ட​மாக மேற்​கொள்ள வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்​தும் ஸ்டா​லின் விவா​தித்​த​தாக தெரி​கிறது.

இளைஞரணி கூட்​டம்

இதனிடையே, திமுக இளைஞர் அணி செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “தி​முக இளைஞர் அணி​யின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்​பாளர், துணை அமைப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் வரும் 23-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறி​வால​யம் கலைஞர் அரங்​கத்​தில் நடை​பெற உள்​ளது.

துணைச் செய​லா​ளர்​கள் முன்​னிலை​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உரை​யாற்​றுகிறார். இந்​தக் கூட்​டத்​தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்​பாளர்​கள், துணை அமைப்​பாளர்​கள் அனை​வரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும். இக்​கூட்​டத்​தில் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்​த​நாள், தி​முக இளைஞர் அணி பணி​கள் குறித்து வி​வா​திக்​கப்​படும்​” என தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here