மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு:
ஆளுநர் ஆர்.என்.ரவி: விபத்தில் அஜித்பவார் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பையும், நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். மிகப்பெரும் துன்ப நிகழ்வான...
20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் தொடங்கியது
admin - 0
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் 2 நாட்கள் நடத்துகின்றன.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டை தென்சென்னை தொகுதி...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் இரும்பு தகட்டை வைத்து, வாடிக்கையாளர்கள் பணத்தை நூதன முறையில் திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, வியாசர்பாடி, பல்லவா 3-வது தெருவில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சரி செய்வதற்காக, நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கி அனுப்பிய ஊழியர்கள் இருவர் வந்தனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில்...
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின்...
நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நாளை காலை 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடைபெறுவதால் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை...
தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் நேற்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை.
தனியார் செயலிகள் மூலம் வாகனங்களை இயக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை...
திருச்சி முகாமில் இருந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி திரும்பிய காமாட்சி அம்மன் கோயில் யானைகள்
admin - 0
திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 பெண் யானைகள், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு சங்கர மடத்தின் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டன. அந்த யானைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவச்...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்வருக்கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடைபெறுகிறது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ், எஸ்.ஞானசேகரன் ஆகியோரின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) தமிழக முதல்வர் ஜன. 3-ம் தேதி அறிவித்தைத் தொடர்ந்து, சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பிப்.8-ம் தேதி...
கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு...
நாடுமுழுவதும் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் பிப்.15-ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவ மனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகள் தலைவர் மருத்துவர் சவுந்தரி கூறியதாவது: உலகம் முழுவம் 9 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 1.30 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியர் சேம்பர்) சுரக்கும்...
